Happy New Year Wishes!!!

Happy New Year Wishes!!!

Let the New Year shower you all with happiness, success and wealth in abundance!!!  Wish you all a happy and prosperous New Year 2021!!! 🎉நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் அள்ளி வழங்குவதாக இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு அமைய வாழ்த்துகிறோம்.🎉இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🎊

பரீட்சை மதிப்பீட்டுக் குழு கலந்துரையாடல்

வடமாகாண முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா இறுதிப் பரீட்சை பெறுபேற்றினை வெளியிடுவதற்கான பரீட்சை மதிப்பீட்டுக் குழு கலந்துரையாடல். இன்று ஆறுதல் நிறுவனத்தில் 2018/2019 கல்வியாண்டிற்கான இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான கலந்துரையாடல் திரு.சு.மோகனதாஸ் (முன்னாள் துணைவேந்தர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இக் கலந்துரையாடலில் பரீட்சை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களான செல்வி.ஜெயா தம்பையா ( முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திப் பிரிவு வடமாகாணம்) , திரு.சி.தில்லைநாதன் ( ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) , திரு.சி.மாதவகுமாரன், திரு.கு.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நட்புதவியாளர் பயிற்சி மீளாய்வு- யாழ்ப்பாண வலயம்

தற்கால கொரோனா சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஆறுதல் நிறுவனத்தில் ஏற்கனவே நட்புதவியாளர் பயிற்சியை கடந்த காலங்களில் பூர்த்தி செய்தவர்களிற்கான சிறிய மீளாய்வொன்று இன்று இடம்பெற்றது. இதில் வளவாளர்களாக திரு.கு.மகிழ்ச்சிகரன் மற்றும் திரு.ச.கிருபானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pedagogy தொடர்பான கலந்துரையாடல்

Pedagogy எனப்படுவது கற்பித்தல் கோட்பாடு மற்றும் நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றைக் கையாளும் ஒழுக்கமாகும். இன்று ஆறுதல் நிறுவனத்தில் Pedagogy தொடர்பான கலந்துரையாடலானது ஆறுதல் நிறுவனப் பணிப்பாளரின் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில் ஆலோசகர்களான DR.J. நல்லையா( Former Vice President college of Education)செல்வி ஜெயா தம்பையா (Director of ECCD Provincial Department of Education-Northern Province), திரு.ந.அனந்தராஜா( Former Deputy Director of Education NIE & Former World bank consultant) ,திரு.சி.மாதவகுமாரன் (Former Assistant Director of Education-Mathematics) […]

வாழ்த்துச் செய்தி

தற்கால கொரோனா சூழ்நிலையிலும் சுகாதார நடைமுறைகளைக் கடைப் பிடித்து நாளை (12.10.2020) இலிருந்து நடைபெற இருக்கின்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்களும் ஆசிகளும்… Aaruthal wishes and blesses the students who will be sitting for the GCE Advanced Level Examination from the 12th October, despite the COVID 19 situation , following all the safety measures.

Grade Five scholarship Exam

✍️👍தற்கால கொரோனா சூழ்நிலையிலும் நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்கள்!!! Best wishes from aaruthal organisation for all the Grade 5 students who are sitting for the Scholarship Examination tomorrow, (11th October) despite the COVID 19 situation.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”

அறிவென்னும் விளக்கேற்றிஅன்பெனும் வழிகாட்டிசந்தனத் தென்றலாய் வலம் வந்து குளிர்சந்திரனின் தன்மையைக் கொண்டுகனியமுத மொழியோடுகல்விதனைப் போதிக்கும்எம் மரியாதைக்குரிய ஆசிரியர்களிற்குஇனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

பட்டதாரிப் பயிலுனர்களின் முகாமைத்துவப் பயிற்சி – முதலாம் தொகுதி

பட்டதாரி பயிலுநர்களுக்கான முகாமைத்துவ பயிற்சி- 14.09.2020 – 18.09.2020 அரசாங்கத்தினால் தற்பொழுது நியமனம் பெற்றுள்ள பட்டதாரிப் பயிலுநர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சிகள் ஆறுதல் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன.அதில் முதலாவது தொகுதியில் 30 பட்டதாரிகளுக்கான முகாமைத்துவப் பயிற்சிகடந்த 14 ஆம் திகதி தொடககம் 18 ஆம் திகதி வரை ஆறுதல் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. ஆறுதலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில், ந.அனந்தராஜ், எஸ். மாதவகுமார், எஸ்.சுகுமார், விவேக், ஜெயவாணி, கு.பிரதீப், முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவி, செயலாளர், ஆகியோர் வளவாளர்களாகச் […]

மூன்றாம் தொகுதி முன்பள்ளி ஆசிரியர்களிற்கான நட்புதவியாளர் பயிற்சி-வடமராட்சி வலயம்

ஆறுதல் நிறுவனம் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த 26 முன்பள்ளி ஆசிரியர்களிற்கு நட்புதவியாளர் பயிற்சியை வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தில் 28.08.2020 தொடக்கம் 01.09.2020 வரை நடாத்தியுள்ளது. இன்று அவ் ஆசிரியர்களிற்கான களத்தரிப்புப் பற்றிய கலந்துரையாடல் உளவளத் துணையாளர்களான திரு.ச.கருணாகரன், திருமதி.சு.சிவமலர், திரு.ச.கிருபானந்தன், திரு.வே.சசிகுமார் ஆகியோரின் உதவியுடன் நடைபெற்றது.