உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020


உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020

இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த 29-02-2020 அன்று இடம்பெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

பிரதம விருந்தினராக திரு. அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன்,
(தவிசாளர் வலி-தென்மேற்கு பிரதேச சபை)
கௌரவ விருந்தினராக திரு. புவனேஸ்வரன் பிரகாஸ் (கிராம சேவகர் மாரீசன் கூடல்) ஆகியார் கலந்துகொண்டனர்.

மேலும், செல்வி ஜெயா தம்பையா (பணிப்பாளர் ஆரம்பப் பிள்ளை அபிவிருத்திப் பிரிவு- வடமாகாணம்) திரு வே. சகுந்தரராஜன் (ஆறுதல் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகஸ்தர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர், ஆறுதல் நிறுவனத்தின் செயல்திட்ட அலுவலர்கள் அ.நாகதீபா, பி நித்யா, திரு.திருக்குமரன், திரு.பிரவீன் மற்றும் நலன் விரும்பிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிநிரல்

 விருந்தினர் வரவேற்பு
 மங்கள விளக்கேற்றல்
 இறைவணக்கம்
 வரவேற்புரை
 தேசியக் கொடியேற்றல்
 ஒலிம்பிக் தீபம் ஏற்றல்
 சத்தியப் பிரமாணம்
 பிரதம விருந்தினர் விளையாட்டு விழாவைஆரம்பித்து வைத்தல்

விளையாட்டுநிகழ்வுகள்
 ஓட்டம்
 துணி உலரவிடல்
 உருவம் பொருத்துதல்
 சொல்லாக்கல்
 குதிரை ஓட்டம்
 சமநிலை நடை
 நூல் கோர்த்தல்
 பலூன் உடைத்தல்
 சோடா மூடி சேகரித்தல்
 மாவிற்குள் இனிப்பு எடுத்தல்
 இடைவேளை (இசைவும் அசைவும்)
 ஸ்ரோவால் தீக்குச்சி அடுக்குதல்
 சாக்கோட்டம்
 கையால் நீர் நிரப்புதல்
 சமநிலை நடை
 குழு விளையாட்டு
 வளையத்தினுள் நுழைதல்
 பாம்பு ஓட்டம்
 பந்துப் பரிமாற்றம்
 கைகளால் வளையம் மாற்றுதல்
 வளைய அஞ்சல்
 வண்டி ஓட்டம்
 ஸ்ரோவால் நீர் நிரப்புதல்
 தலைமைஉரை
 கௌரவ விருந்தினர் உரை
 பிரதம விருந்தினர் உரை
 நன்றியுரை
 பரிசில்கள்வழங்கல்

இளவாலைப் பிரதேசத்திலுள்ள, பொருளாதாரம் மற்றும் கல்விப் பின்புலத்தில் பின்தங்கியுள்ள கிராமமான உயரப்புலக் கிராமத்திலுள்ள மாணவர்களிற்கு இலவசமாகக் கல்வியை வழங்குவதன் மூலம் அக் கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு அக் கிராமத்தின் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருப்பதை நோக்காகக் கொண்டு ஆறுதல் நிறுவனமானது கனடாவைச் சேர்ந்த திருமதி.மகேந்திரன் அவர்களின் நிதி உதவியுடன் அங்குள்ள மாணவர்களிற்கு மாலை நேர வகுப்புக்களை நடாத்தி அவர்களுக்கான கல்விச் சேவையினை வழங்கி வருகின்றது.

தரம்- 02 தரம்- 10 வரையிலான மாணவர்களை உள்ளடக்கியதாக மாலை நேரவகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. 76 மாணவ மாணவியர் தற்பொழுது கல்விகற்று வருகின்றனர். 4ஆசிரியர்கள் அவர்களுக்கான கல்விச் சேவையினை வழங்கி வருகின்றனர்.

ஆறுதல் நிறுவனமானது இங்கு கல்வி கற்கின்ற மாணவர்களின் நலன் கருதி அவர்களின் உடல் உள மற்றும் சமூகத்திறன் விருத்திகளை வெளிக்கொணரும் வகையில்
அவர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை நடாத்தி மேலும் அவர்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக செயற்படுகின்றது.