பட்டதாரிப் பயிலுனர்களின் முகாமைத்துவப் பயிற்சி – முதலாம் தொகுதி

பட்டதாரி பயிலுநர்களுக்கான முகாமைத்துவ பயிற்சி- 14.09.2020 – 18.09.2020
அரசாங்கத்தினால் தற்பொழுது நியமனம் பெற்றுள்ள பட்டதாரிப் பயிலுநர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சிகள் ஆறுதல் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன.அதில் முதலாவது தொகுதியில் 30 பட்டதாரிகளுக்கான முகாமைத்துவப் பயிற்சிகடந்த 14 ஆம் திகதி தொடககம் 18 ஆம் திகதி வரை ஆறுதல் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. ஆறுதலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில், ந.அனந்தராஜ், எஸ். மாதவகுமார், எஸ்.சுகுமார், விவேக், ஜெயவாணி, கு.பிரதீப், முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவி, செயலாளர், ஆகியோர் வளவாளர்களாகச் செயற்பட்டனர். 5 நாட்கள் நடைபெற்ற செயலமர்வில்,

  1. பயிற்சியின் நோக்கங்களும், பயிலுநர்களின் பணி எதிர்பார்க்கைகளும் –
  2. ஆறுதல் நிறுவனத்தின் வரலாறு,நிர்வாக நடை முறைகள், பணிக்கூற்று,தூரநோக்கு, மகுடவாசகம்
  3. தலைமைத்துவப் பண்புகள்,முரண்பாட்டு முகாமைத்துவம் -(Leadership skills and Conflict Management)
  4. வளங்களின் முகாமைத்துவம் (Resource Based Management)
  5. ஆறுதலின் முன்பள்ளிச் செயற்பாடுகள்(Pre School Activities)
  6. ஆறுதலின் கற்றல் ஊக்கிகளும், இடைநிலைக் கல்வியில் அவற்றின் விளைவுகளும் (Learning Stimulations)
  7. ஆறுதலின் விசேட செயல் திட்டங்கள்- சொலிடார், தேசிய மொழிகள் நிதியம். Special Projects)
  8. செயல்திட்ட முன்மொழிவு (Project Proposal)
  9. செயல்திட்டம் தயாரித்தல் (Project writing)
  10. தொடர்பாடல் திறன்கள்(Communication Skills)
  11. ஆறுதல் இணையத் தளம்,மற்றும் இணையத் தளங் களில் பதிவேற்றுதல்,ஆறுதல் சஞ்சிகை, வடலிகள் சஞ்சிகை வெளியீடுகள்.(Aaruthal website- aaruthal.lk, Magazenes publihing by Aaruthal)
  12. தலைமைத்துவம்,தொடர்பாடல் திறன் தொடர்பாக நாடகமாக நடித்தல் (Role Plays for Leadership and Communication skills- Positive approach and Negative approach)
  13. வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் கட்டமைப்பு-(Structure of Preschool Trade Union
  14. அறிக்கை எழுதுதல் (Report writing)
    ஆகிய விடயங்களில் ஆறுதலின் வளவாளர்களினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.