கொரோனா அனர்த்த காலத்தில் ஆறுதல் நிறுவனத்தின் உள சமூகப் பணி
கொரோனா ( (Covid – 19) பாதிப்பால் உலகம் முழுவதுமே பல்வேறு விதமான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உளசமூகப் பிரச்சினைகளும் மிக முக்கியமான தாக்கமாக உணரப்படுகிறது. அந்த வகையில் இலங்கையும் இவ்வாறான பாதிப்புக்களுக்கு விதிவிலக்கல்ல.
ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் உளசமூகப் பணியில் ஈடுபட்டு வருகின்றது அனைவரும் அறிந்த விடயமே. முக்கியமாக போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் உளசமூகப் பணியை மேற்கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் ஆறுதல் நிறுவனத்தின் பணியானது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியம் என அதன் பணிப்பாளர், ஊழியர்கள் மற்றும் வளவாளர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
18 மே மாதம் 2020 அன்று பணிப்பாளர், உளசமூகப் பணியாளர்கள் இணைந்து தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறான உள சமூகத் தலையீடுகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
ஆறுதல் நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட உளவளத்துணை மற்றும் நட்புதவி ஆசிரியர்கள் அனைவரையும் இக்குழுமத்தில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக உளசமூகப் பணியினை கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்வதற்கான கருத்திட்டம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் இக்குழுமம் இறங்கியுள்ளது. மேலும் இப்பணிக்கு உள மருத்துவர்களான வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ் மற்றும் வைத்திய கலாநிதி ரி.கடம்பநாதன் ஆகியோர் மேலதிக ஆலோசனைகளை வழங்குவார்கள்.
—
The world has been affected by Corona (Covid-19). Psychological threats are the main problem in all across the world according the report of World Health Organization. Sri Lanka also has undergone to these intimidations.
Aaruthal has been working in the education and psycho social sectors since 2006. Mainly, it is occupied for the well-being of war affected parents, teachers and students and victims of tsunami. Therefore, the Aaruthal team decided their service is essential in this Corona period.
The Director and the counsellors conducted a discussion to peruse psycho-social interventions in the present situation in 18th May 2020 and also it has taken the steps to seam Aaruthal-trained teacher counsellors and befrienders in the team. The team has been preparing a concept note to work with education ministry in North and East provinces in the first place for psycho-social service. Psychiatrists Dr.S.Sivathas and Dr.T. Kadampanathan will be in the advisory board.