க.பொ.த. சாதாரண தர தேர்வுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துரித கற்றல்
ஆறுதல் நிறுவனத்தின் துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 21 ஆம் 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி வலயத்தில் உள்ள செஞ்சோலை விரிவுரை மண்டபத்தில் க.பொ.த. சாதாரண தர தேர்வுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது
மேற்படி செயலமர்வில் செஞ்சோலை மகளிர் இல்லம் மற்றும் புதுக்குடியிருப்;பு வலயத்தில் இயங்கும் பாரதி இல்லம், அன்பு இல்லம் ஆகிய சிறுவர்கள் நலன்புரி நிலையங்களில்; தங்கியிருந்து கற்கும் மாணவர்களில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான துரித பயிற்சிச் செயலமர்வுகள் வழங்கப்பட்டன. இக் கருத்தரங்கிலும், செயலமர்விலும் 45 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி செயலமர்வில்; திரு.சி.மாதவகுமார், திருமதி.ஜோர்ஜ் ஜனதா, திரு.ந.அனந்தராஜ், திரு.பரா.கஜேந்திரன் ஆகியோரைக் கொண்ட வளவாளர்களால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கணிதம், விஞ்ஞானம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் துரித பயிற்சிச் செயலமர்வுகள் நடத்தப்பட்டன. இச் செயலமர்வுகளின் பொழுது இலகு முறையில் கற்பதற்கான கையேடுகளும், மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்பட்டு செயலமர்வு நிறைவில் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.