முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் – உளவளப் பயிற்சி வழங்குவதற்கான கலந்துரையாடல்
கோரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், முன்பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த இடர் காலத்தின் சமூக உளவள சிக்கல்களை எதிர்கொள்ளவும், பிள்ளைகளுடன் நேயத்தோடும் அக்கறையோடும் அவர்களின் உடல் உள பழக்கங்களை முகாமை செய்யவும் முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பொருட்டு அவர்களுக்கு கட்டம் கட்டமாக நட்புதவியாளர் – உளவளப் பயிற்சி வழங்குவதற்கான கலந்துரையாடல் ஆறுதல் நிறுவனத்தில் 20.06.2020 அன்று இடம்பெற்றது.
ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. சுந்தரம் டிவகலாலா தலைமையில் , துறைசார் உளவள வளவாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இக்கலந்துரையாடலில், ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி வழங்குவது- எத்தகைய ஆலோசனைகளை வழங்குவது என்பது தொடர்பாகவும் பொருத்தமான உளவள மாதிரிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் 24.06.2020 அன்று மேற்படி பயிற்சிகளின் முதற் தொகுதி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.