ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை கடந்த மார்ச் 8, 9 ஆம் திகதிகளில் தென்மராட்சி, தீவக வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறுதல் செயற்திட்ட அலுவலகத்தில் வழஙகப்பட்டது. பயிற்றுவிப்பாளர் பயிற்சி மூலம் வளவாளர்களாக குறித்த வலயங்களில் இருந்து பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களால் இரு வலயங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட இருபது ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இப்பயிற்சிப் […]
ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம்- மாதாந்த கலந்துரையாடல்
ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், முன்பள்ளி ஆசிரியர் சங்கங்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் வவுனியா வடக்கு, தெற்கு ஆகிய வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் மார்ச் 10 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் முன்பள்ளி ஆரியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தேவைகள் பற்றியும், அவர்கள் ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் […]
வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மகளிர் தின வாழ்த்து
இன்று (மார்ச்-08) கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடலிகளை வானுயர்த்தும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. தாய்மை உணர்வுடன் சிறார்களை அரவணைத்து, அவர்களுக்கான மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் நாளைய சமூகத்தில் பலம் மிக்கவர்களாக உருவாக அத்திவாரமிடும் உன்னதமான பணியை மேற்கொள்ளும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், அந்த ஆசிரியர்களுடன் சிறந்த உறவைப் பேணும் தாய்மாருக்கும் இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக வட மாகாண […]
உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020
உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020 இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த 29-02-2020 அன்று இடம்பெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக திரு. அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், (தவிசாளர் வலி-தென்மேற்கு பிரதேச சபை) கௌரவ விருந்தினராக திரு. புவனேஸ்வரன் பிரகாஸ் (கிராம சேவகர் மாரீசன் கூடல்) ஆகியார் கலந்துகொண்டனர். மேலும், செல்வி ஜெயா தம்பையா (பணிப்பாளர் ஆரம்பப் பிள்ளை அபிவிருத்திப் பிரிவு- வடமாகாணம்) திரு வே. சகுந்தரராஜன் […]