கொரோனா ( (Covid – 19) பாதிப்பால் உலகம் முழுவதுமே பல்வேறு விதமான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உளசமூகப் பிரச்சினைகளும் மிக முக்கியமான தாக்கமாக உணரப்படுகிறது. அந்த வகையில் இலங்கையும் இவ்வாறான பாதிப்புக்களுக்கு விதிவிலக்கல்ல. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் உளசமூகப் பணியில் ஈடுபட்டு வருகின்றது அனைவரும் அறிந்த விடயமே. முக்கியமாக போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் உளசமூகப் பணியை மேற்கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் […]
கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தில் சிறுவர்களின் உளநிலையைக் கையாளுதல்
கொரோனாவின் தாக்கத்தினால் சிறுவர்களும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருகிறார்கள். இந்நிலைமையானது சிறுவர்களுக்கும் பல உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தலாம். முக்கியமாக அவர்கள் எவ்வாறான குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வாறான ஆளுமைப் பண்புகளை உடையவர்கள் என்பதனாலும் அவர்களின் வயது, பால் போன்றவற்றினாலும் உளத் தாக்கங்கள் வேறுபடலாம். தற்போது பொதுவாகச் சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் தொடர்பாடல்களும் உறவு நிலைமைகளும் குடும்ப மட்டத்திலும் இணையவழித் தொடர்பாடல்களிலும் தங்கியிருக்கின்றது. சிறுவர்களின் பௌதீக ரீதியான அசைவு வீட்டுக்குள் மட்டுமே காணப்படுகின்றது. இந்த நிலைமையை சிறுவர்கள் தங்களுக்கு எவ்வாறு பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள், இந்த நிலைமை அவர்களுக்கு சௌகரியமாக உள்ளதா […]
கொரோனா தனிமைப்படுத்தல் நெருக்கடியான சூழ்நிலையில் உள ஆரோக்கியத்தைப் பேணுதல்
அவசரமாக இயங்கிக் கொண்டிருந்த உலகில், இன்று கொரோனா (Covid -19 ) தாக்கத்ததினால்; பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தற்பொழுது நாள் முழுக்க எல்லா விடயங்களிலும் கொரோனா பற்றிய பேச்சாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் நாங்கள், எங்களுடைய இந்த தனிமைப்படுத்தல் காலத்தை தற்போதும் பிற்காலத்திலும் ஆரோக்கியமானதாக ஆக்கிக்கொள்ளலாம் என்பதில் தெளிவு பெற்றிருத்தல் நன்மை பயக்கும். கொரோனா பரவுதலினால் அநேகமான நாடுகளில் கொரோனா தொற்றைத் தடுக்கும் முகமாக மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையானது பல்வேறு வழிகளில் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இன்னல்களையும் […]
வீட்டுத் தோட்டம் அமைக்க முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஆறுதல்’ நிறுவனம் அழைப்பு!
முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் போசகருமான சுந்தரம் டிவகலாலா கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண கூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முன்வருமாறும், அதற்கான வழிகாட்டலை ‘ஆறுதல்’ நிறுவனம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘ஆறுதல்’ நிறுவனம் வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘டிப்ளோமா’ பயிற்சி நெறியை வழங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் […]