கோரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், முன்பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த இடர் காலத்தின் சமூக உளவள சிக்கல்களை எதிர்கொள்ளவும், பிள்ளைகளுடன் நேயத்தோடும் அக்கறையோடும் அவர்களின் உடல் உள பழக்கங்களை முகாமை செய்யவும் முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பொருட்டு அவர்களுக்கு கட்டம் கட்டமாக நட்புதவியாளர் – உளவளப் பயிற்சி வழங்குவதற்கான கலந்துரையாடல் ஆறுதல் நிறுவனத்தில் 20.06.2020 அன்று இடம்பெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. சுந்தரம் டிவகலாலா தலைமையில் , துறைசார் உளவள வளவாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இக்கலந்துரையாடலில், ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி […]
முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவமும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்களும்!
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்பள்ளிக் கல்வியினை மையப்படுத்தி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுபவரும், ஆறுதல் நிறுவன பணிப்பாளரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளருமான திரு. சுந்தரம் டிவகலாலா பங்கு கொள்ளும் முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவமும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்களும் என்ற நிகழ்வில் குறித்த விடயம் தொடர்பான உங்கள் வினாக்களுக்கு விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 20 ஜூன் 2020 (சனிக்கிழமை) மு.ப.10 மணி – 11மணி வரை நிகழ்வு இடம்பெறும் பதிவுகளுக்கு கீழே உள்ள தொடுப்பை (link) அழுத்தவும்: https://forms.gle/Gu1tfw7apA6U23Wi9
பரீட்சைப் பெறுபேறு வெளியாகும் காலத்தில் சிறுவர்களின் உளநலம்
ந.றஞ்சுதமலர் – உளவளத்துணையாளர் ஒவ்வொரு பொதுப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை வாழ்த்துவதும், பாராட்டு வெளியீடுகளையும் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் குறிப்பிட்ட காலம் வரை காணலாம். அதே வேளையில் பல மாணவர்களின் விபரீத முடிவுகளையும் குறிப்பாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் போன்ற செய்திகளையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கப்பெறாமையினால்தான் குறிப்பிட்ட மாணவன் அல்லது மாணவி இவ்வாறான செயல்களைச் செய்தார்கள் எனப் பொதுவாகக் காரணம் சொல்லப்படுகிறது. இந்நிலையானது அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் அவர் சார்ந்தோரையும் ஏனைய […]