அதிர்ச்சியளிக்கும் செய்தி ஆறுதல் ஸ்தாபகர் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்கள் 2023.01.12 அன்று அமரத்துவம் அடைந்தார். Shocking News Founder of Aaruthal Mr.Suntharam Divakalala passed away on 2023.01.12.

சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வளவாளர் பயிற்சிப்பட்டறை

சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வளவாளர் பயிற்சிப்பட்டறை

தேசிய மொழிகள் மற்றும் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டமானது கனேடிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் , தேசிய மொழி நிதியத்தினால்(NLF) முன்னெடுக்கப்படுகின்றது. இச்செயற்றிட்டம் தனுடைய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாக சமூகம் மொழி உரிமைகள் குறித்து விழிப்புணர்வைப் பெறுவதோடு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இரண்டாம் மொழியைக் கற்கவும் சமூக நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை முன்னேற்றுவதுமாகும். இச்செயற்றிட்டமானது இரண்டு வருட காலப்பகுதியைக்கொண்டது. அத்தோடு  சமூக மட்ட அமைப்புக்களையும், முன்பள்ளிஆசிரியர்களையும், இளைஞர் யுவதிகளையும் பிரதான மாற்று முகவர்களாக கொண்டு இச்செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சிப்பட்டறை நாள் 01 குறித்த வளவாளர் […]

மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வளவாளர் பயிற்சிகள்

ஆறுதல் நிறுவனம் முன்னெடுக்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டத்தின் ‘சமூக மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான’ மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வளவாளர் பயிற்சிகள் கடந்த 24 .04.2021 ஆம் திகதி முதல் 27.04.2021 வரையும் வவுனியா தெற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.இவ் வளவாளர் பயிற்சி நிகழ்வில் வவுனியா தெற்கு , செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் 20 பேர் பயிலுனர்களாகக் கலந்து கொண்டனர்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  அடிப்படை ஆங்கிலம் வகுப்புக்களுக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஆங்கிலம் வகுப்புக்களுக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு

ஆறுதல் நிறுவனத்தின் பிரதான பயனாளிகளும் பங்குபற்றுனர்களுமான முன்பள்ளிச் சமூகத்தினரின் வலுவூட்டல் செயற்பாடுகளில் பிறிதோர் பகுதியாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஆங்கில வகுப்புக்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவ் ஆங்கில வகுப்பானது சொலிடார் நிறுவனத்தின் அனுசரணையுடனும் கல்வி அமைச்சின் அனுமதியுடனும் நாடத்தப்பட்டன.குறித்த ஆங்கில வகுப்புக்களில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 27.03.2021 சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பிள்ளைப்பராய அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் […]

இரண்டாம் தொகுதி நட்புதவியாளர் பயிற்சி- வலிகாமம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி ஆறுதல் நிறுவனத்தினால் இரண்டாம் தொகுதியினருக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாக தனது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான டிப்ளோமா பயிற்சி மற்றும் மாதிரி முன்பள்ளிகளை நடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகின்றது. கொவிட்-19 சர்வதேச பரவல் காரணமாக இலங்கையிலுள்ள முன்பள்ளிகளிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. முக்கியமாக முன்பள்ளி பிள்ளைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் இதன் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள். பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிப்பதைத் தொடர்ந்து […]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி – யாழ்ப்பாண வலயம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி ஆறுதல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாக தனது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான டிப்ளோமா பயிற்சி மற்றும் மாதிரி முன்பள்ளிகளை நடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகின்றது. கொவிட்-19 சர்வதேச பரவல் காரணமாக இலங்கையிலுள்ள முன்பள்ளிகளிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. முக்கியமாக முன்பள்ளி பிள்ளைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் இதன் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள். பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிப்பதைத் தொடர்ந்து முன்பள்ளிகளும் ஆரம்பிக்கப்படல் […]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் – உளவளப் பயிற்சி வழங்குவதற்கான கலந்துரையாடல்

கோரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், முன்பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த இடர் காலத்தின் சமூக உளவள சிக்கல்களை எதிர்கொள்ளவும், பிள்ளைகளுடன் நேயத்தோடும் அக்கறையோடும் அவர்களின் உடல் உள பழக்கங்களை முகாமை செய்யவும் முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பொருட்டு அவர்களுக்கு கட்டம் கட்டமாக  நட்புதவியாளர் – உளவளப் பயிற்சி வழங்குவதற்கான கலந்துரையாடல் ஆறுதல் நிறுவனத்தில் 20.06.2020 அன்று இடம்பெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. சுந்தரம் டிவகலாலா தலைமையில் , துறைசார் உளவள வளவாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இக்கலந்துரையாடலில், ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி […]