முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவமும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்களும்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்பள்ளிக் கல்வியினை மையப்படுத்தி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுபவரும், ஆறுதல் நிறுவன பணிப்பாளரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளருமான திரு. சுந்தரம் டிவகலாலா பங்கு கொள்ளும் முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவமும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்களும் என்ற நிகழ்வில் குறித்த விடயம் தொடர்பான உங்கள் வினாக்களுக்கு விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 20 ஜூன் 2020 (சனிக்கிழமை) மு.ப.10 மணி – 11மணி வரை  நிகழ்வு இடம்பெறும் பதிவுகளுக்கு கீழே உள்ள தொடுப்பை (link) அழுத்தவும்: https://forms.gle/Gu1tfw7apA6U23Wi9

தென்மராட்சி, தீவக வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை கடந்த மார்ச் 8, 9 ஆம் திகதிகளில் தென்மராட்சி, தீவக வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறுதல் செயற்திட்ட அலுவலகத்தில் வழஙகப்பட்டது. பயிற்றுவிப்பாளர் பயிற்சி மூலம் வளவாளர்களாக குறித்த வலயங்களில் இருந்து பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களால் இரு வலயங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட இருபது ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இப்பயிற்சிப் […]

ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம்- மாதாந்த கலந்துரையாடல்

ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், முன்பள்ளி ஆசிரியர் சங்கங்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் வவுனியா வடக்கு, தெற்கு ஆகிய வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் மார்ச் 10 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் முன்பள்ளி ஆரியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தேவைகள் பற்றியும், அவர்கள் ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் […]

உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020

உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020 இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த 29-02-2020 அன்று இடம்பெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக திரு. அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், (தவிசாளர் வலி-தென்மேற்கு பிரதேச சபை) கௌரவ விருந்தினராக திரு. புவனேஸ்வரன் பிரகாஸ் (கிராம சேவகர் மாரீசன் கூடல்) ஆகியார் கலந்துகொண்டனர். மேலும், செல்வி ஜெயா தம்பையா (பணிப்பாளர் ஆரம்பப் பிள்ளை அபிவிருத்திப் பிரிவு- வடமாகாணம்) திரு வே. சகுந்தரராஜன் […]