ஆறுதல் நிறுவனத்தின் பிரதான பயனாளிகளும் பங்குபற்றுனர்களுமான முன்பள்ளிச் சமூகத்தினரின் வலுவூட்டல் செயற்பாடுகளில் பிறிதோர் பகுதியாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஆங்கில வகுப்புக்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவ் ஆங்கில வகுப்பானது சொலிடார் நிறுவனத்தின் அனுசரணையுடனும் கல்வி அமைச்சின் அனுமதியுடனும் நாடத்தப்பட்டன.குறித்த ஆங்கில வகுப்புக்களில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 27.03.2021 சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பிள்ளைப்பராய அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் […]
திசைமுகப்படுத்தல் நிகழ்வு
2021 ம் ஆண்டிற்கான முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் திசைமுகப்படுத்தல் நிகழ்வானது கடந்த 27.02.2021, 28.02.2021 ஆகிய தினங்களில் வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு, மற்றும் மடு ஆகிய வலயங்களில் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் வடமாகாண முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா, வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் , நிலைய இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்… மேற்படி கற்கை நெறியை வவுனியா தெற்கு வலயத்தில் 44 ஆசிரியர்களும், வவுனியா வடக்கு வலயத்தில் 36 […]
முன் பிள்ளைப்பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்
எமது நிறுவனம் கல்வி அமைச்சின் அனுமதியுடன் சொலிடார் நிறுவனத்துடன் இணைந்து “முன் பிள்ளைப்பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்”என்ற செயற்றிட்டத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவர்களின் தகைமை சார்ந்ததும், சமூகம் சார்ந்ததுமான திறன்களை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருகிறது.. இச்செயற்றிட்டத்தின் ஊடாக வெள்ளம், கொவிட் 19 போன்றவற்றால் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உணவுப்பொதியொன்றை வழங்குவதற்கு எமக்கு நிதிவழங்கும் நிறுவனம் தீர்மானித்திருந்ததுடன் அதற்காக ஏழு வலயங்களில் இருந்து ஆசிரியர் விபரங்களை கல்வி அமைச்சின் ஊடாகப் பெற்றிருந்தோம். அதற்கமைய குறித்த உணவுப்பொதிகளுக்குரிய ரூ.2000 பெறுமதியான கூப்பன்களை கையளிக்கும் நிகழ்வு […]