ஆறுதல் நிறுவனத்தினுடைய பதினொராவது ஆண்டு பொதுக்கூட்டம் திரு.ராஜன் நைல்ஸ் தலைமையில் கடந்த 15-12-2018 அன்று ஆறுதல் அலுவலகத்தின் பிரதான மண்டபத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா 2018ஆம் ஆண்டிற்கான ஆறுதல் நிறுவனத்தின் முன்னேற்றத் திட்டங்களை முன்வைத்தார். அத்தோடு நிதி முகாமைத்துவ பிரதிநிதியால் நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டது. இவை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிற்கான ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. ஆறுதல் நிறுவன நிர்வாக இயக்குனர்கள், பணிப்பாளர்கள் மற்றும் […]
வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான எம் உறவுகளுக்கு உதவுவோம்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உலர்உணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள், படுக்கை விரிப்புகள், என்பவற்றை முடிந்த அளவு சேகரித்து வழங்கும் வண்ணம் வடமாகாண கௌரவ ஆளுனர் ரெஜினோல்ட் குரே அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைவாக 25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று இவற்றை ஆறுதல் நிறுவனத்தினர் கண்டாவளை பதில் பிரதேச செயலாளர், திரு.ரி.பிருந்தாகரன் அவர்களிடமும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எம்.பிரதீபன் அவர்களிடமும் கையளித்தனர். புதுக்குடியிருப்பு செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் கலந்து கொண்டு கௌரவித்தார். அவ்வேளையில் தற்போது அப்பகுதி மக்களுக்குப் பின்வரும் பொருட்கள் தேவைப்படுகின்றன […]
BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா
கோண்டாவில் மற்றும் அரியாலை BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா கடந்த 08.12.2018 சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகரான திரு.சி.மாதவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பிள்ளை அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும், ஹற்றன் நசனல் வங்கி அலுவலர்களும் முன்பள்ளி சிறார்களும் ஆசிரியைகளும் பெற்றோரும் கலந்து […]
“ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதே கற்றல் நிகழும்”
“ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் போது வளர்ச்சியடையும். அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வளர்ச்சி அடைவதற்கு குழந்தை நல்ல சந்தோசமான சூழ்நிலையில் வாழவேண்டும். அவர்கள் செய்கின்ற ஒவ்வெரரு நல்ல விடயங்களையும் பெரியோராகிய நாம் தட்டிக் கொடுக்க வேண்டும் இன்று 3 ஆம் ஆண்டு பிள்ளைகளுக்குக்கூட, ரியூசனிற்கு அனுமதி கோருகின்றார்கள். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடை வேண்டும் என்ற சிறிய சந்தோசத்திற்காக பிள்ளைகளை வதைக்கின்றார்கள். அவ்வாறு இருந்தும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் எத்தனை பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்கள்? எவ்வளவு பேர் நல்ல […]
க.பொ.த. சாதாரண தர தேர்வுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துரித கற்றல்
ஆறுதல் நிறுவனத்தின் துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 21 ஆம் 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி வலயத்தில் உள்ள செஞ்சோலை விரிவுரை மண்டபத்தில் க.பொ.த. சாதாரண தர தேர்வுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது மேற்படி செயலமர்வில் செஞ்சோலை மகளிர் இல்லம் மற்றும் புதுக்குடியிருப்;பு வலயத்தில் இயங்கும் பாரதி இல்லம், அன்பு இல்லம் ஆகிய சிறுவர்கள் நலன்புரி நிலையங்களில்; தங்கியிருந்து கற்கும் மாணவர்களில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான துரித பயிற்சிச் […]
யுத்தப் பாதிப்புக்குள்ளான சமூகத்தை ஆற்றுப்படுத்தும் “ஆறுதல்”
“மாற்றமுறும் உலகின் அறைகூவல்களுக்கு முகம் கொடுக்கவல்ல உள நலமும், உடல் நலமும் கொண்ட ஒரு சமூதாயம்” என்ற தூர நோக்கோடு செயலாற்றிவரும் ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் கடந்துபோன மூன்று தசாப்த யுத்தத்தினால் கல்வி, கலை, கலாசார, பொருளாதார நிலைகளில் அதளபாதாளத்தில் வீழ்ந்து மீள் எழுச்சிக்காக ஏங்கும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் காயங்களை ஆற்றுப்படுத்தும் சமூக நலத்திட்டங்களில் ஈடுபட்டுவரும் உன்னதமான சேவையினை ஆற்றிவருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பரிமாணங்களில் தனது சேவையினை ஆற்றிவரும் ஆறுதல் நிறுவனத்தின் பணிகள் சமூகத்தின் பாற்பட்டவை. கல்விச் சேவை […]